விளம்பரங்கள்
077 318 0033
விளம்பரங்கள்
077 318 0033

குறிச்சொற்கள்

விரைவில்

விரைவில்

விரைவில்

விளம்பரங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசநிதியின் மூலம் கட்டிமுடிக்கப்பட்ட 200 மேற்பட்ட கட்டிடங்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றது. மட்டு அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

- க.விஜயரெத்தினம் -

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசநிதியினால் கட்டப்பட்டு சுமார் 200 இற்கு மேற்பட்ட அரசாங்கத்திற்கு உரித்துடைய கட்டிடங்கள் பயன்படுத்தப்படாமல் சேதமடைந்து பாழடைந்த நிலையில் பராமரிப்பின்றி காணப்படுகின்றது.அரசாங்க நிதியில் கட்டப்பட்டு, பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் காணப்படும் கட்டிடங்கள் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் கவலையளிக்கும் விடயமாகும்.இவ்வாறன நிலையில் கட்டிடங்களைக் கட்டுவதைவிட கல்விஅபிவிருத்திக்கும், விவசாயத்திற்கும் முன்னுரிமையளித்து மட்டக்களப்பு மாவட்டத்தை கல்வியிலும்,விவசாயத்திலும் கட்டியெழுப்புவோம் என மட்டக்களப்பு மாவட் அரசாங்க அதிபார் மா.உதயகுமார் தெரிவித்தார்.

துறைநீலாவணை பிரதேச பொது அமைப்புக்களுடன் கிராமத்தின் தேவைகள் தொடர்பான கலந்துரையாடல் சனிக்கிழமை(25.8.2018) காலை 10.00 மணியளவில் துறைநீலாவணை தெற்கு 1 பல்தேவைக்கட்டிட மண்டபத்தில் பிரதேச சபை உறுப்பினர் கே.சரவணமுத்து தலைமையில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையில் அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவசாயிகளின் நலன்கருதி துறைநீலாவணையில் அமைக்கப்பட்டிருக்கின்ற ஏற்று நீர்ப்பாசனம் பழுதடைந்துள்ளமையால் அதனைத் திருத்தம் செய்தல் ,மற்றும் உவர் நீர் அணைக்கட்டு அமைப்பது தொடர்பாக விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் அரச அதிபர் மா.உதயகுமார் அவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்ததன் பயனாக மாவட்டசெயலாளர் துறைநீலாவணைக் கிராமத்திற்கு நேரடியாக வருகைதந்து விவசாய அமைப்புக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பார்வையிட்டார்.அதன் பின்னர் பொதுமக்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கிராமத்தில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்:-

ஒருகிராமத்தினைப்பொறுத்தமட்டில் அங்கு பல கட்டிடங்களை அமைப்பதனால் அக்கிராமம் அபிவிருந்தி அடைவதில்லை.அபிவிருத்தி அடைவதற்கு அக்கிராமத்தில் கல்வி,பொருளாதாரம், விவசாயம் போன்ற துறைகளில் முன்னேற்றம் அடையும்போதுதான் அபிவிருத்தியை அடையமுடியும். மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் தேவைகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் அதனை நிறைவுசெய்வதற்குப் போதிய வளங்கள் இல்லாமல் இருக்கின்றது.அதனால் கட்டிடங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை வழங்குவதனைவிட கல்விக்கும் விவசாயத்திற்கும் முன்னுரிமை வழங்கவேண்டியிருக்கின்றது.

துறைநீலாவணைக்கிராமத்தில் பலகுறைபாடுகளை முன்வைத்திருக்கின்றீர்கள். இக்குறைகளை தற்போது உடனடியாகச்செய்யாவிட்டாலும் எதிர்காலத்தில் அதனை செய்துமுடிப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்படும். மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசெயலகப்பிரிவில் இருக்கின்ற 45 கிராம சேவகர் பிரிவில் துறைநீலாவணைக்கிராமம் உற்பத்திக்கிராமமாக தெரிவுசெய்யப்பட்டு இருக்கிறது.அதேபோன்று குளங்கள் புனரமைப்புத் திட்டத்தில் இங்குள்ள குளம் ஒன்றும் புனரமைப்புச செய்யப்படுகிறது.இவற்றுடன் இக்கிராமத்தின் முக்கியமான வேலையை இணங்கண்டு இதைத்தான் செய்யவேண்டும் எனப் பட்டியல் இட்டு அதனை கிராமசேவகர் மூலம் அனுப்பிவையுங்கள் அதனைப்பார்வையிட்டு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

விளம்பரங்கள்

மரண அறிவித்தல்

விரைவில்

நினைவஞ்சலி

விரைவில்

விரைவில்

விரைவில்

முகப்பு செய்திகள்

Thamil Osai

No-184, Bazaar Street
Batticaloa
077 318 0033
thamilosai7@gmail.com
Thamil Osai © All rights reserved
Design & developed by NSystemNetworks