விளம்பரங்கள்
077 318 0033
விளம்பரங்கள்
077 318 0033

குறிச்சொற்கள்

விரைவில்

விரைவில்

விரைவில்

விளம்பரங்கள்

கல்முனை தமிழ்ப்பிரிவில் குறும்பட நெறியாள்கை பயில் அரங்கு

- செ.துஜியந்தன் -

கிழக்குமாகாண கல்முனை பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பிரதேச குறும்பட கலைஞர்களுக்கான குறும்பட நெறியாள்கை பயில் அரங்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கலாசார உத்தியோகஸ்தர் ரி. பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வளவாளர்களாக எழுத்தாளர் உமாவரதராஜன், கிழக்குப்பல்கலைக்கழக விரிவுரையாளர் க.மோகனதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதேச செயலகம் சார்பில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் இ.இராஜகுலேந்திரன், நிர்வாக உத்தியோகஸ்தர், கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி கீதா ஆகியோர் ஆரம்ப நிகழ்வில் கலந்து கெர்டனர்.

இங்கு குறம்படத்திற்கும் நாடகத்திற்கும் இடையிலான வித்தியாசங்கள் மற்றும் சிறந்த குறும்படங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பான நவின நுட்பங்கள் தொடர்பில் வளவாளர்களினால் கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் சிறந்த குறும்படங்களும் காண்பிக்கப்பட்டது.

கலந்துரையாடலில் கல்முனைப் பிரதேசத்தில் குறும்படம் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் அனுபவங்கள்தொடர்பிலும் கேட்டறியப்பட்டன. கல்முனை தமிழ்ப் பிரிவில் குறும்படக் கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறந்த குறும்படம் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பிலும் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விளம்பரங்கள்

மரண அறிவித்தல்

விரைவில்

நினைவஞ்சலி

விரைவில்

விரைவில்

விரைவில்

முகப்பு செய்திகள்

Thamil Osai

No-184, Bazaar Street
Batticaloa
077 318 0033
thamilosai7@gmail.com
Thamil Osai © All rights reserved
Design & developed by NSystemNetworks